சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்- 02 லால்லால்லா லலால்லா லால்லால்லா லலால்லா லால்லால்லா லலால்லா லா லா லா லா சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி வாழ்க்கை சக்கரத்தை சுத்திவிடு தங்கச்சி! அங்கேபாரு சின்னத்தம்பி அழகழகா ஓட்டிவாரான் அவனுக்கு நீ இளைச்சவளா தங்கச்சி அந்த சின்னத்தம்பி ஓட்டும்போது சிங்காரமா நீயும் ஓட்ட சீக்கிரமா கத்துக்கணும் தங்கச்சி - (இப்பவே) சீக்கிரமா கத்துக்கணும் தங்கச்சி (அப்படி சைக்கிள் ) காருகப்பல் விமானத்தை கன்னிப் பொண்ணுக ஓட்டுறாக ஊருக்குள்ளே வந்துபாரு தங்கச்சி இந்தக் காலத்தோடு நீயும் சேர்ந்து கலந்துவளர வேணுமுன்னா வேகமா நீ சைக்கிள் கத்துக்க தங்கச்சி! - இப்பவே வேகமா நீ சைக்கிள் கத்துக்க தங்கச்சி! புருஷன் ஓட்டிப்போக பின்னால் பொண்ணுகளெல்லாம் உட்கார்ந்திருக்க போனதெல்லாம் பழைய கதை தங்கச்சி -இப்ப பொண்ணுங்களெல்லாம் சைக்கிள் ஓட்ட புருஷன்காரன் பின்னாலிருக்க புதிய கதையை நீ நடத்து தங்கச்சி இனிமே புதிய கதையை நீ நடத்து தங்கச்சி ( அப்படி சைக்கிள் ) இப்பாடலை இயற்றிப் பாடியவர் கவிஞர் நா. முத்துபாஸ்கரன். தற்போது இவர் கவிஞர் நா. முத்துநி...