புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல் - 08 புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி ! தொகையறா புவனமெல்லாம் காத்தருளும் தேவி - உந்தன் புகழ்பாடத் துடிக்குதுஎன் ஆவி தவமிருக்கேன் உன்பாதமலர் தூவி - எந்தன் உளமதிலே குடியிருக்கும் தேவி! (பாட்டு) புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி -உன்னைப் புரிந்தோரின் வாழவெல்லாம் வரும்நிம்மதி புதுமைகள் தான்செய்ய நீயே கதி - நெஞ்சம் போற்றிடவே நான்தஞ்சம் உன்காலடி (புதுகையில்) பாவங்கள் தினம்போக்கும் பரமேஸ்வரி-உள்ளம் பண்படநல் வழிகாட்டும் மலர்ச்சேவடி பக்தர்கள் நினைவெல்லாம் நீயே குடி -உந்தன் பார்வையில் பனியாகும் பிணியின் பிடி (புதுகையில்) ஆசைகள் அழிந்தாலே சுகமாகும் - என்றும் அமைதியில் உன்வடிவம் உலகாளும் ஓம் என்னும் ஓசையே துணையாகும்- உள்ளம் உனையன்றி வேறேது நினைவாகும். (புதுகையில்) வருகின்றோம் நாமுந்தன் வாயிற்படி -துன்பம் வாராது காக்கின்ற கோவிற்படி அறியாத பலபேரும் அறியும்படி - வந்து அமர்ந்தாயே இம்மக்கள் ஆசைப்படி (புதுகையில்) இப்பாடலை எழுதியவர் நற்கவிச்...