விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல் -11 ஆண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே..ஏ... பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி பெண்: இசை பாடி இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம் ஆண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண்: கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே.... இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண்: தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஆண்: தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே. பெண்: காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே பெண்: விளையாடி ஆண்: இசை பாடி இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்...