இடுகைகள்

சின்ன மச்சான், என்ன புள்ள

படம்
  பெண் -         ஏ...சின்ன மச்சான் ஆண் -          என்ன புள்ள பெண் -         செவத்த மச்சான் ஆண் -          என்ன சொல்லுபுள்ள பெண் -         ஊருக்குள்ள உங்கள ஏசுறாக.                        தினமும் ஒன்ன ரெண்டா.                                       சொல்லி  பேசுறாங்க ஆண் -          ஆ..ஏ..சின்ன புள்ளே பெண் -         என்ன மச்சான் ஆண் -          செவத்த புள்ள பெண் -         சொல்லு மச்சான் ஆண் -           அடி செவத்த புள்ள பெண் -      ...

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்  -11 ஆண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண்:  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே..ஏ... பெண்:  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண்:  அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே ஆண்:  அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி பெண்:  இசை பாடி இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம் ஆண்:  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண்:  கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே.... இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண்:  தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஆண்:  தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே. பெண்:  காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே பெண்:  விளையாடி ஆண்:  இசை பாடி இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்...

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

படம்
புதுக்கோட்டையால் பிரபலமான  மக்களிசை பாடல்  ஆக்காட்டி ஆக்காட்டி -நீ எங்கெங்கே முட்டையிட்டே? நான் கல்லைத் துளைச்சு கருமலையில் முட்டையிட்டேன் நான் இட்டது நாலு முட்டை பொறிச்சது மூனு குஞ்சு அந்த மூனு குஞ்சுலே மூத்தகுஞ்சக்கிரை தேடி மூனு மலை சுத்தி வந்தேன். நடுக்குஞ்சுக்கிரை தேடி நாலுமலை சுத்திவந்தேன் இளைய குஞ்சிக்கிரை தேடப் போகையிலே அந்தக் கானான் குறத்தி மகன் கண்டிருந்து கண்ணி போட்டான் என் காலிரண்டும் கண்ணிக்குள்ளே ரெக்கை ரெண்டும் மாரடிக்க நான் அழுதகண்ணீர் ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட குளமாய் பெருகி குருதை குளிப்பாட்ட ஏரிபெருகி எருது குளிப்பாட்ட நான் பெத்த மக்கா- உங்களைப் பாதியிலே விட்டு இப்பப் பரலோகம் போறேனே, போறேனே.... ஏழைக் குருவியென ஏங்கியழக் கூடாது கத்தும் குருவியெனக் கதறியழக் கூடாது வலையென்ன பெருஞ்சுமையா அதையறுக்க வழிகளும் வகையாய் இருக்குதம்மா இப்பாடலை எழுதியவர்/ பாடியவர் டாக்டர். கே.ஏ.குணசேகரன்  அவர்கள்.    இப்பாடலிலுள்ள சோக வரிகளை  அதாவது "ஏழைக் குருவியென ஏங்கியழக் கூடாது" என்கிற எழுச்சி வரிகளை எழுதியவர், தோழர் எஸ்.ஏ....

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!

படம்
  புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல் - 08 புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி ! தொகையறா புவனமெல்லாம் காத்தருளும் தேவி - உந்தன் புகழ்பாடத் துடிக்குதுஎன் ஆவி தவமிருக்கேன் உன்பாதமலர் தூவி - எந்தன் உளமதிலே குடியிருக்கும் தேவி!                 (பாட்டு) புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி -உன்னைப் புரிந்தோரின் வாழவெல்லாம் வரும்நிம்மதி புதுமைகள் தான்செய்ய நீயே கதி - நெஞ்சம் போற்றிடவே நான்தஞ்சம் உன்காலடி (புதுகையில்) பாவங்கள் தினம்போக்கும் பரமேஸ்வரி-உள்ளம் பண்படநல் வழிகாட்டும் மலர்ச்சேவடி பக்தர்கள் நினைவெல்லாம் நீயே குடி -உந்தன் பார்வையில் பனியாகும் பிணியின் பிடி (புதுகையில்) ஆசைகள் அழிந்தாலே சுகமாகும் - என்றும் அமைதியில் உன்வடிவம் உலகாளும் ஓம் என்னும் ஓசையே துணையாகும்- உள்ளம் உனையன்றி வேறேது நினைவாகும். (புதுகையில்) வருகின்றோம் நாமுந்தன் வாயிற்படி -துன்பம் வாராது காக்கின்ற கோவிற்படி அறியாத பலபேரும் அறியும்படி - வந்து அமர்ந்தாயே இம்மக்கள் ஆசைப்படி (புதுகையில்) இப்பாடலை எழுதியவர் நற்கவிச்...

கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்-

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 07 கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்- இங்கே ஆப்பரேசன் தியேட்டர்ல டாக்டரக் காணோம் கட்டணக் கழிப்பறையிலே கதவையும் காணோம் காசு கொடுத்து உள்ளே போனா தண்ணியக் காணோம் பெருமாப்பட்டி குப்புத்தாயி டி.வி பார்க்குது- அவ பேரன்லவ்லி போட்டு போட்டு கலர மாத்துது விடிய விடிய முழுச்சிக்கிட்டு டீவி பார்க்குது விடிஞ்சு மணி எட்டாச்சு இன்னும் தூங்குது சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல - இத யாரிடம் போய்ச் சொல்லுவது நமக்கும் புரியல புத்தகமும் நோட்டுமில்ல பள்ளிக்குப் போறான்  - பையன் மறக்காம பான்பராக்கை வாங்கிட்டு போறான் டாஸ்மாக் கடையைப் பார்த்து சிரிச்சிட்டு போறான்- அவ செல்போன்ல சேதிகள சொல்லிட்டு போறான் மழைகாலம் வந்திச்சுன்னா மறந்திடாதிங்க குடையில்லாம சர்க்கார் பஸ்ல ஏறிடாதீங்க என்னென்னமோ நடக்குதிங்க கண்ணு முன்னாலே எதித்து கேட்க நாதியில்ல ஏன்னு தெரியல சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல -இத யாரிடம் போய்ச் சொல்றது நமக்கும் புரியல.  அறந்தை பாவா , இயற்பெயர்  பாவா மொகய்தீன் , திருநெல்வேலி பத்தமடை. வணிகம் பொருட்டு புதுக்கோட்டை அறந்தாங...

அட சொல்லுங்கடா வந்து அள்ளுங்கடா

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 06 பேல மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா அள்ளி போட மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா ஒரு மிருகம் பேண்டதை              அட ஒரு மிருகம் அள்ளல அட ஆறறிவு கொண்ட முண்டமே              உன் அறிவுக்கு இது ஏன் எட்டல மலக்குழியில சாகுறோம்              அட கேட்க ஒரு துப்பில்ல இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும்              அட அதுல ஒன்னும் தப்பில்ல ஆள மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா செத்து மாள மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா மூக்கைப் பிடி...