விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்  -11

ஆண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே


பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே..ஏ...

பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே

ஆண்: அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி

பெண்: இசை பாடி

இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

ஆண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

பெண்: கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே. இசை அமுதே....

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

ஆண்: தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே.

ஆண்: தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே. ஓடோடி வந்த சொர்க்க போகமே.

பெண்: காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே

பெண்: விளையாடி

ஆண்: இசை பாடி

இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

ஆண்: சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே. சந்தோஷம் காண உள்ளம் நாடுதே.

ஆண்: சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே. சந்தோஷம் காண உள்ளம் நாடுதே.

பெண்: மங்காத தங்கமிது மாறாத வைரமிது மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
பெண்: விளையாடி.

ஆண்: இசை பாடி

இருவர்: விழியாலே உறவாடி இன்பம் காணலாம்

பெண்: ஹா...ஆஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே..ஏ. இசை அமுதே..ஏ

இருவர்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே.

இப்பாடல் புதையல் திரைப்படத்திற்காக  ம.கி. ஆத்மநாதன் எழுதியது. இவர்
புதுக்கோட்டை பொன்னமராவதி தாலுகா வலையப்பட்டியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரத்தபாசம்’ படத்தில் 'பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?’ பாடல் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். 1978-ம் வருடம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!