கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்-
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 07
கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்- இங்கேஆப்பரேசன் தியேட்டர்ல டாக்டரக் காணோம்
கட்டணக் கழிப்பறையிலே கதவையும் காணோம்
காசு கொடுத்து உள்ளே போனா தண்ணியக் காணோம்
பெருமாப்பட்டி குப்புத்தாயி டி.வி பார்க்குது- அவ
பேரன்லவ்லி போட்டு போட்டு கலர மாத்துது
விடிய விடிய முழுச்சிக்கிட்டு டீவி பார்க்குது
விடிஞ்சு மணி எட்டாச்சு இன்னும் தூங்குது
சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல - இத
யாரிடம் போய்ச் சொல்லுவது நமக்கும் புரியல
புத்தகமும் நோட்டுமில்ல பள்ளிக்குப் போறான் - பையன்
மறக்காம பான்பராக்கை வாங்கிட்டு போறான்
டாஸ்மாக் கடையைப் பார்த்து சிரிச்சிட்டு போறான்- அவ
செல்போன்ல சேதிகள சொல்லிட்டு போறான்
மழைகாலம் வந்திச்சுன்னா மறந்திடாதிங்க
குடையில்லாம சர்க்கார் பஸ்ல ஏறிடாதீங்க
என்னென்னமோ நடக்குதிங்க கண்ணு முன்னாலே
எதித்து கேட்க நாதியில்ல ஏன்னு தெரியல
சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல -இத
யாரிடம் போய்ச் சொல்றது நமக்கும் புரியல.
அறந்தை பாவா, இயற்பெயர் பாவா மொகய்தீன் , திருநெல்வேலி பத்தமடை. வணிகம் பொருட்டு புதுக்கோட்டை அறந்தாங்கியில் குடியேறி அறந்தை பாவா என்கிற பெயரில் அறியப்பட்டார். நாட்டு நடப்புகளைப் பாடலாக்குவதில் தேர்ந்தவர். இனிய குரலும் ராகமும் வரனாகப் பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில பொதுக்குழு உறுப்பினர். ஜோக்கர் திரைப்படத்தில் இவர் பாடிய என்னங்க சார் உங்கச் சட்டம், என்னங்க சார் உங்கத் திட்டம் பாடல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் இவர் வாய்தா, முந்திரிக்காடு திரைப்படங்களில் பாடியுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக