புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!

 புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல் - 08

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!

தொகையறா

புவனமெல்லாம் காத்தருளும் தேவி - உந்தன்
புகழ்பாடத் துடிக்குதுஎன் ஆவி தவமிருக்கேன் உன்பாதமலர் தூவி - எந்தன்
உளமதிலே குடியிருக்கும் தேவி!

                (பாட்டு)

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி -உன்னைப்
புரிந்தோரின் வாழவெல்லாம் வரும்நிம்மதி
புதுமைகள் தான்செய்ய நீயே கதி - நெஞ்சம்
போற்றிடவே நான்தஞ்சம் உன்காலடி
(புதுகையில்)

பாவங்கள் தினம்போக்கும் பரமேஸ்வரி-உள்ளம்
பண்படநல் வழிகாட்டும் மலர்ச்சேவடி பக்தர்கள் நினைவெல்லாம் நீயே குடி -உந்தன்
பார்வையில் பனியாகும் பிணியின் பிடி (புதுகையில்)


ஆசைகள் அழிந்தாலே சுகமாகும் - என்றும் அமைதியில் உன்வடிவம் உலகாளும்
ஓம் என்னும் ஓசையே துணையாகும்- உள்ளம்
உனையன்றி வேறேது நினைவாகும். (புதுகையில்)

வருகின்றோம் நாமுந்தன் வாயிற்படி -துன்பம்
வாராது காக்கின்ற கோவிற்படி
அறியாத பலபேரும் அறியும்படி - வந்து
அமர்ந்தாயே இம்மக்கள் ஆசைப்படி (புதுகையில்)


இப்பாடலை எழுதியவர் நற்கவிச்சித்தர் கவிஞர் நிலவை பழனியப்பன் அவர்கள். பாடியவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். இவரது பாடல்கள் பல திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் மெல்லிசை பாடல்கள் வரிசையில் ஒலிபரப்பி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் துணை பொதுமேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  ஊர் - வயலோகத்திற்கும் அருகில் நிலையப்பட்டி. ஒரு கிராமத்தின் கதை  உட்பட ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ