பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை – 04
ஆலங்குடி நாடியம்மா அறந்தாங்கி
வீரகாளியம்மா
திருவப்பூரில் வாழ்பவளே முத்துமாரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்தவளே
கருமாரியம்மா (பொன்மகளே)
நாகையிலே வாழ்பவளே நெல்லுக்கடை
மாரியம்மா
நார்த்தாமலை நாயகியாம் நல்ல
முத்துமாரியம்மா
சக்தி உமையானவளே சமயப்புரத்து
மாரியம்மா
சத்தியமங்கலத்தில் பண்ணாரி
மாரியம்மா
அகிலம் எல்லாம் உன்னாட்சி
அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)
தில்லையிலே தில்லைநாயகி திருச்சிற்றம்பலத்தில்
பெரியநாயகி
தென்மதுரை நகரினிலே தெப்பக்குளத்து
மாரியம்மா
திருநெல்வேலியிலே காந்திமதி
அம்மா
பொன்மாரி பொழிபவளே பொள்ளாச்சி
மாரியம்மா
புதுகையில் அமர்ந்தவளே புவனேஸ்வரி
அம்மா
அகிலம் எல்லாம் உன்னாட்சி
அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)
கோவைமா நகரினிலே தண்டு மாரியம்மா
ஈரோட்டு நகரிலே இரண்டு மாரியம்மா
சின்னமாரி பெரியமாரி சேர்ந்து
இரண்டு பொன்னுத்தாயி
சேலம் மாநகரினிலே கோட்டை
மாரியம்மா
சிங்கப்பூர் நாட்டிலே வீரமாகாளியம்மா
மலைமேல வாழ்கின்ற இஞ்சிப்பாறை
மாரியம்மா
மைசூரில் குடிகொண்டாள் முகாம்பிகை
தேவியம்மா
அகிலம் எல்லாம் உன்னாட்சி
அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)
மேல்மலையனூரில் அமைந்தவளே
ஓம்சக்தி
மேல்மருவத்தூரில் கோவில்கொண்ட
ஆதிபராசக்தி
மயிலையிலே வாழுகின்ற முண்டகக்
கண்ணியம்மா
மாங்காடு தனில் வாழும் காமாட்சி
அம்மா
வீரபாண்டியிலே கௌமாரியம்மா
விஜயவடாவிலே கனகதுர்கை அம்மா
சிவகங்கை சீமையிலே வெட்டுடையார்
காளியம்மா
சிந்தலக் கரையினிலே வெட்காளியம்மா
வடபத்திர காளியம்மா பாடைகட்டி
மாரியம்மா
அகிலம் எல்லாம் உன்னாட்சி
அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)
கண்ணபுரம் நாயகியே மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடையம்மா
கோட்டை காளியம்மா கோட்டூர்
மாரியம்மா
கொடுங்கலூர் பகவதி அம்மா
சோற்றானிக்கரை பகவதி அம்மா
வயலோகம் மாரியம்மா வைத்தூர்
மாரியம்மா
வரங்களைத் தந்திடுவாள் வடகாடு
மாரியம்மா
கேட்டதெல்லாம் கொடுப்பவளே
கீழாத்தூர் நாடியம்மா
தங்கமுகம் கொண்டவளே தஞ்சை
முத்துமாரியம்மா
நெஞ்சமெல்லாம் சிலிர்க்கும்
எங்கள் வெங்களப்பிடாரி அம்மா
அகிலம் எல்லாம் உன்னாட்சி
அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)
திண்டுக்கல் நகரினிலே கோட்டை
மாரியம்மா
செந்தூரில் கோயில்கொண்ட சந்தன
மாரியம்மா
வால்பாறை நகரினிலே காமாட்சி
அம்மா
அக்காமலை கருமலை வேளாங்கண்ணி
அம்மா
அங்களகுறிச்சியிலே முத்துமாரியம்மா
ஆனைமலை வாழுகின்ற மாசாணியம்மா
பெரியபாளையத்தில் பாளையத்தம்மா
பெரம்பூர் வாழுகின்ற வீரமாகாளியம்மா
பெரியபாளையத்தில் பாளையத்தம்மா
பட்டுக்கோட்டை நாடியம்மா
பாத்தருள வேணும் அம்மா
அகிலாண்டகோடி பிரம்மாண்ட
நாயகியே அரியநாச்சி அம்மா
அம்மா…
என் உயிர்க்காத்த தாயே ராஜகோபாலபுரம்
வாழுகின்ற முத்துமாரியம்மா
முத்து….மாரியம்மா…. ( பொன்மகளே )


நமது மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய நபர்
பதிலளிநீக்குமிகுந்த சோகம்
பதிலளிநீக்கு