சின்ன மச்சான், என்ன புள்ள

 பெண்      ஏ...சின்ன மச்சான்

ஆண்       என்ன புள்ள

பெண்      செவத்த மச்சான்

ஆண்       என்ன சொல்லுபுள்ள

பெண்      ஊருக்குள்ள உங்கள ஏசுறாக.

                      தினமும் ஒன்ன ரெண்டா.                                       சொல்லி பேசுறாங்க

ஆண்       ஆ..ஏ..சின்ன புள்ளே

பெண்      என்ன மச்சான்

ஆண்-       செவத்த புள்ள

பெண்      சொல்லு மச்சான்

ஆண்        அடி செவத்த புள்ள

பெண்      என்ன சொல்லு மச்சான்

ஆண்       யாரு யாரு என்ன பேசுனாக

                      அடி என்னவெல்லாம் சொல்லி.                             ஏசுனாக

பெண்      ஏ... கண்ணு மச்சான்

ஆண்       ஆ.. என்ன புள்ள

பெண்-       கருத்த மச்சான்

ஆண்       சொல்லு புள்ள

பெண்-       ஏ கருத்த மச்சான்

ஆண்       என்ன சொல்லு புள்ள

பெண்      காரக்குடி வனிதா யாரு மச்சான்

                       ஏ காதுகுள்ள வந்த சேதி                                          மச்சான்

ஆண்       ஏ... கட்டப்புள்ள

பெண்-       என்ன மச்சான்

ஆண்       கருத்தப் புள்ள

பெண்      சொல்லு மச்சான்

ஆண்       முடி கருத்த புள்ள

பெண்-       என்ன சொல்லு மச்சான்

ஆண்       கட்டழகி வனிதா பேருபுள்ள

                      நம்ம கண்ணனோட சேர்ந்த.                                  சோடிபுள்ள

பெண்      ஏ...குட்ட மச்சான்

ஆண்       என்ன புள்ள

பெண்      கொஞ்சும் மச்சான்

ஆண்       சொல்லுபுள்ள

பெண்      என்ன கொஞ்சும் மச்சான்

ஆண்       என்ன சொல்லுபுள்ள

பெண்-       கொன்னையூர் சாந்தி யாரு      

                      மச்சான். என்ன குழப்புறாக                                    தெளிவா  கூறு மச்சான்.

ஆண்       ஏ குட்ட புள்ள

பெண்      என்ன மச்சான்

ஆண்       கொஞ்சும் புள்ள

பெண்-       சொல்லு மச்சான்

ஆண்-        என்ன கொஞ்சும் புள்ள

பெண்-       என்ன சொல்லு மச்சான்

ஆண்-        கொன்னையூரு சாந்தி.                                           யாருமில்ல. அந்த கோயிலுல                                பார்த்த சின்னப் புள்ள.

பெண்      ஏ ஆசை மச்சான்

ஆண்-        என்ன புள்ள

பெண்      அழகு மச்சான்

ஆண்       சொல்லு புள்ள

பெண்      ஏ அழகு மச்சான்

ஆண்       என்ன சொல்லு புள

பெண்-       ஆலங்குடி அனிதா யாரு மச்சான்

                      இது அக்கம் பக்கம் பேசும்                                       பேச்சு   மச்சான்.

ஆண்-        ஏ அத்த புள்ள

பெண்-       என்ன மச்சான்

ஆண்-        அழகு புள்ள

பெண்-       சொல்லு மச்சான்

ஆண்       அடி அழகு புள்ள

பெண்      என்ன சொல்லு மசான்

ஆண்       ஆலங்குடி அனிதா நல்ல புள்ள

                      அக்கம் பக்கம் பேசும்படி.                                         ஒன்னுமில்ல

பெண்      ம்...நேச மச்சான்

ஆண்       என்ன புள்ள

பெண்      நீங்க மச்சான்

ஆண்-         சொலலு புள்ள

பெண்-       எனக்கு நீங்க மச்சான்

ஆண்       என்ன சொல்லுபுள்ள

பெண்    என்ன மட்டும் நீங்க தொட்டுக்கங்க

                     மச்சான் எனக்கு மட்டும் தாலி                                கட்டிக்குங்க.

ஆண்-        ம்...மாமன் புள்ள

பெண்      என்ன மச்சான்

ஆண்       இந்த மாசததுல

பெண்      சொல்லு மச்சான்

ஆண்       வரும் மாசததுல

பெண்-       என்ன சொல்லு மச்சான்

ஆண்       ஊருக்கெல்லாம்  பாக்கு                                         வக்கப்போறேன். நா ஓம்                                         புருசன்                         ஆகி                                       நிக்கப்போறேன்.

இப்பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் திரு. செல்ல.தங்கையா அவர்கள். இவர் ஆலங்குடி வட்டம் களபம் ஊரைச் சேர்ந்தவர். 100 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இப்பாடலை அவர் 20 ஆம் வயதில் எழுதினார். இப்பாடலை பாடகர் செந்தில்கணேஷூம் அவரது தங்கை தேன்மொழியும் முதலில் பாடினார்கள். பிறகு இப்பாடல்  செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி இணையினரால் பல கச்சேரிகளில் பாடப்பட்டது. இப்பாடல் சார்லின் சாப்ளின் -2 திரைப்படத்தில் இடம்பெற்றது. செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் பாடல்கள் வரிசையில் இவர் மனைவுடன் சேர்ந்து பாடிய "கடலுநீர அள்ளிக்குடிச்சா தாகம் அடங்குமா; கண்ணீரோட தூங்க நினைச்சா கண்ணு உறங்குமா " என்கிற பாடலும் "ஏனுங்க இன்னொருத்தி எனக்கு வேணாம் சக்களத்தி" என்கிற பாடலும் மக்கள் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்கள். மேலும் இவர் திரைபடப் பாடல்களும் எழுதியுள்ளார்.


செப்டம்பர் 29,2024 அன்று பாடகர் திரு. செல்ல. தங்கையா அவர்களை நேரில் சந்தித்து உரையாடி இப்பாடலைப் பெற்றேன்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!