குறிஞ்சி மலைத்தேன்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் -03
குறிஞ்சி மலைத்தேனே
கொண்டாடும் சந்தனமேசரிஞ்சி படுத்திருக்கும்
செண்பகமே கண்ணுறங்கு
(ஆரிராரி)
கண்ணுறங்கும் ராசாவே
கால் மொளச்ச பின்னாலே
ஒண்ணு ரெண்டு கத்துக்கொள்ள
ஓட வேணும் கண்ணுறங்கு
( குறிஞ்சி )
ஆத்தா கத்துக்கல
அப்பன்கூட படிக்கவில்லை
பூத்த புது ராசாவே
பொல்லாங்க தீர்த்திடடா
(ஆரிராரி)
உச்சத்து நிலாவே நீ
ஒழுங்கா படிக்க வேணும்
அச்சத்த உட்டுபுட்டு
ஆளாகி நடக்க வேணும் (குறிஞ்சி)
நட்சத்திர பூப்பறிச்சி
நாதஸ்வர மேளம் வச்சி
அட்சரங்கள் கத்துக் கொள்ள அனுப்பிடுவேன் கண்ணுறங்கு
(ஆரிராரி )
இப்பாடலை எழுதியவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி அவர்கள். இவரது இயற்பெயர் ஜி.வெங்கட்ராமன். அறந்தாங்கி. சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமுஎகசவின் முன்னாள் மாவட்டச் செயலர். பனிரெண்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். இப்பாடல் புதுக்கோட்டை மாவட்டம் அறிவொளி இயக்கம் வெற்றிவிழா மலரிலிருந்து எடுத்தாளப்பட்டது.

அறிவொளி இயக்கம் தந்த ஆசான்
பதிலளிநீக்கு