இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே

புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை - 05


இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே (2)

இலங்கையின் மண்ணினைப் பொன்னாக்கித் தந்ததும் எந்தயர் திருக்கரங்கள்


அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் செழிப்புற வளர்த்ததும் எங்கள்
மங்கையர் வளைக்கரங்கள்  ( இலங்கை)


கற்பின் கனலிகள் செல்வக் குழந்தைகள் கதறலும் கேட்கலையோ- எங்கள்

காளையர் இரத்தமும் கடலினில் பாய்வதைக் கண்கொண்டு பார்க்கலையோ ( இலங்கை)

நித்தம் நித்தம் அங்கு செத்து மடிகிறார் எங்களின் மீனவர்கள்
எங்கள் புத்தனின் போர்வையில் இரத்தம் குடித்திடும் பொல்லாத வல்லூறுகள்
 (இலங்கை)

ஒன்று இரண்டல்ல இருபத்து ஐந்து வருடம் ஓடி மறைந்தது காண்

இனி உங்கள் விழிநீரைத் துடைத்திடும் நாள்வரை ஓய்ந்திடோம் நாங்களும்தான்
தலைச் சாய்ந்திடோம்  நாங்களும்தான்!
(இலங்கை)


இப்பாடலை இயற்றிப் பாடியவர் செம்பை மணவாளன் அவர்கள். இவர் எழுத்தாளர், கவிஞர், பாடகர். இசைக்குழு நடத்தி பல்வேறு பாடல்கள் பாடியவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.   2003 ஆம் ஆண்டு தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களுக்கான  உண்ணாவிரதப் போராட்டத்தில்  இப்பாடலை முதலில் பாடினார்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

ஆக்காட்டி ஆக்காட்டி -நீ

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!