இடுகைகள்

அட சொல்லுங்கடா வந்து அள்ளுங்கடா

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 06 பேல மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா அள்ளி போட மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா ஒரு மிருகம் பேண்டதை              அட ஒரு மிருகம் அள்ளல அட ஆறறிவு கொண்ட முண்டமே              உன் அறிவுக்கு இது ஏன் எட்டல மலக்குழியில சாகுறோம்              அட கேட்க ஒரு துப்பில்ல இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும்              அட அதுல ஒன்னும் தப்பில்ல ஆள மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா செத்து மாள மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா மூக்கைப் பிடி...

இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை - 05 இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே (2) இலங்கையின் மண்ணினைப் பொன்னாக்கித் தந்ததும் எந்தயர் திருக்கரங்கள் அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் செழிப்புற வளர்த்ததும் எங்கள் மங்கையர் வளைக்கரங்கள்  ( இலங்கை) கற்பின் கனலிகள் செல்வக் குழந்தைகள் கதறலும் கேட்கலையோ- எங்கள் காளையர் இரத்தமும் கடலினில் பாய்வதைக் கண்கொண்டு பார்க்கலையோ ( இலங்கை) நித்தம் நித்தம் அங்கு செத்து மடிகிறார் எங்களின் மீனவர்கள் எங்கள் புத்தனின் போர்வையில் இரத்தம் குடித்திடும் பொல்லாத வல்லூறுகள்  (இலங்கை) ஒன்று இரண்டல்ல இருபத்து ஐந்து வருடம் ஓடி மறைந்தது காண் இனி உங்கள் விழிநீரைத் துடைத்திடும் நாள்வரை ஓய்ந்திடோம் நாங்களும்தான் தலைச் சாய்ந்திடோம்  நாங்களும்தான்! (இலங்கை) இப்பாடலை இயற்றிப் பாடியவர் செம்பை மணவாளன் அவர்கள். இவர் எழுத்தாளர், கவிஞர், பாடகர். இசைக்குழு நடத்தி பல்வேறு பாடல்கள் பாடியவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.   2003 ஆம் ஆண்டு தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் ...

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

படம்
  புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை – 04   பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா ஆலங்குடி நாடியம்மா அறந்தாங்கி வீரகாளியம்மா திருவப்பூரில் வாழ்பவளே முத்துமாரியம்மா திருவேற்காட்டில் அமர்ந்தவளே கருமாரியம்மா (பொன்மகளே)   நாகையிலே வாழ்பவளே நெல்லுக்கடை மாரியம்மா நார்த்தாமலை நாயகியாம் நல்ல முத்துமாரியம்மா சக்தி உமையானவளே சமயப்புரத்து மாரியம்மா சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மா அகிலம் எல்லாம் உன்னாட்சி அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)   தில்லையிலே தில்லைநாயகி திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி தென்மதுரை நகரினிலே தெப்பக்குளத்து மாரியம்மா திருநெல்வேலியிலே காந்திமதி அம்மா பொன்மாரி பொழிபவளே பொள்ளாச்சி மாரியம்மா புதுகையில் அமர்ந்தவளே புவனேஸ்வரி அம்மா அகிலம் எல்லாம் உன்னாட்சி அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)   கோவைமா நகரினிலே தண்டு மாரியம்மா ஈரோட்டு நகரிலே இரண்டு மாரியம்மா சின்னமாரி பெரியமாரி சேர்ந்து இரண்டு பொன்னுத்தாயி சேலம் மாநகரினிலே கோட்டை மாரியம்மா சிங்கப்பூர் நாட்டிலே வீரமாகாளியம்மா மலைமேல வாழ்கின்ற இஞ்...

குறிஞ்சி மலைத்தேன்

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் -03 குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே சரிஞ்சி படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு (ஆரிராரி) கண்ணுறங்கும் ராசாவே கால் மொளச்ச பின்னாலே ஒண்ணு ரெண்டு கத்துக்கொள்ள ஓட வேணும் கண்ணுறங்கு ( குறிஞ்சி ) ஆத்தா கத்துக்கல அப்பன்கூட படிக்கவில்லை பூத்த புது ராசாவே பொல்லாங்க தீர்த்திடடா (ஆரிராரி) உச்சத்து நிலாவே நீ ஒழுங்கா படிக்க வேணும் அச்சத்த உட்டுபுட்டு ஆளாகி நடக்க வேணும்  (குறிஞ்சி) நட்சத்திர பூப்பறிச்சி நாதஸ்வர மேளம் வச்சி அட்சரங்கள்  கத்துக் கொள்ள அனுப்பிடுவேன் கண்ணுறங்கு (ஆரிராரி ) இப்பாடலை எழுதியவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி அவர்கள்.  இவரது இயற்பெயர்  ஜி.வெங்கட்ராமன் . அறந்தாங்கி. சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமுஎகசவின் முன்னாள் மாவட்டச் செயலர். பனிரெண்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். இப்பாடல் புதுக்கோட்டை மாவட்டம் அறிவொளி இயக்கம்  வெற்றிவிழா மலரிலிருந்து எடுத்தாளப்பட்டது.

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி

படம்
  புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்- 02 லால்லால்லா லலால்லா லால்லால்லா லலால்லா லால்லால்லா லலால்லா லா லா லா லா சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி வாழ்க்கை சக்கரத்தை சுத்திவிடு தங்கச்சி! அங்கேபாரு சின்னத்தம்பி அழகழகா ஓட்டிவாரான் அவனுக்கு நீ இளைச்சவளா தங்கச்சி அந்த சின்னத்தம்பி ஓட்டும்போது சிங்காரமா நீயும் ஓட்ட சீக்கிரமா கத்துக்கணும் தங்கச்சி -  (இப்பவே) சீக்கிரமா கத்துக்கணும் தங்கச்சி  (அப்படி சைக்கிள் ) காருகப்பல் விமானத்தை கன்னிப் பொண்ணுக ஓட்டுறாக ஊருக்குள்ளே வந்துபாரு தங்கச்சி இந்தக் காலத்தோடு நீயும் சேர்ந்து கலந்துவளர வேணுமுன்னா வேகமா நீ சைக்கிள் கத்துக்க தங்கச்சி! - இப்பவே வேகமா நீ சைக்கிள் கத்துக்க தங்கச்சி! புருஷன் ஓட்டிப்போக பின்னால் பொண்ணுகளெல்லாம் உட்கார்ந்திருக்க போனதெல்லாம் பழைய கதை தங்கச்சி -இப்ப பொண்ணுங்களெல்லாம் சைக்கிள் ஓட்ட புருஷன்காரன் பின்னாலிருக்க புதிய கதையை நீ நடத்து தங்கச்சி இனிமே புதிய கதையை நீ நடத்து தங்கச்சி ( அப்படி சைக்கிள் ) இப்பாடலை இயற்றிப் பாடியவர் கவிஞர் நா. முத்துபாஸ்கரன்.   தற்போது இவர் கவிஞர் நா. முத்துநி...

ஓட்டுக்கேட்டு வந்தாங்களே சின்னாத்தா

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் - 01 காரு போட்டு ஓடி வந்து கையெடுத்து சலாம் போட்டு அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி ஓட்டு கேட்க வந்தாங்களே சின்னாத்தா- இப்போ ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா. சாதி நம்ம  சாதியின்னா தாயே சரணமின்னா ஒங்க வீட்டுப் புள்ளேயின்னா ஓட்டுப் போட வேணுமின்னா ஓட்டு போட்ட கையோட சின்னாத்தா- இப்ப ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமாக் கொடியைக் கட்டி சாலையெல்லாம் தூள் பறக்க சரஞ்சரமாய் ப்ளசர் விட்டு ஓட்டுக் கேட்க வந்தாங்களே சின்னாத்தா- இப்போ ஒருத்தனையுங் காணலியே செல்லாத்தா மல்லவட்டுத் துண்டு போட்டு மைக்கு வச்சு விளம்பரங்க வாழ்வு மலருமின்னா வறுமை தொலையுமின்னா போடுங்கம்மா ஓட்டுஇன்னா பொடலங்காயைப் பார்த்துஇன்னா  ( ஓட்டுக்கேட்டு வந்தாங்களே) ஏழை எளியதுக எல்லாருக்கும் நன்மை இன்னா வேலை கெடைக்குமின்னா விலைவாசி குறையுமின்னா சாலை தெரு வெளக்கு சர்காரு வசதிஇன்னா போட்ட வெளக்குக் கூட சின்னாத்தா-இப்ப பொசுக்குன்னு நின்னுபோச்சே செல்லாத்தா தாலிக்குத் தங்கந்தாரேந் தாளிக்க வெங்காயந்தாரே(ன்) கூலிக்கு வேலை தாரேங் கூப்பிட...